ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் ரணிலைதனியாகச் சந்தித்துப் பேச ‘மொட்டு’ விருப்பம்

Date:

ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் தனிப்பட்ட சந்திப்பை நடத்துவதற்கான கோரிக்கையை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முன்வைத்துள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே, இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சாகர காரியவசம் உட்பட கட்சியின் உறுப்பினர்கள் பலரும் ஜனாதிபதியுடனான நேற்றைய சந்திப்பில் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்களான மஹிந்த அமரவீர, நிமல் சிறிபால டி சில்வா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க ஆகியோரும் கலந்துகொண்டனர்.

அத்துடன், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், ஐக்கிய தேசியக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன, பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோரும் கலந்துகொண்டனர்.

சுமார் ஒன்றரை மணித்தியாலங்கள் இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடலில் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டது என்று தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் தமது கட்சி இதுவரையில் தீர்மானம் எடுக்காத நிலையில், ஜனாதிபதியுடன் தனிப்பட்ட கலந்துரையாடல் ஒன்றின் மூலம் இந்த விடயம் தொடர்பில் ஆழமாகக் கலந்துரையாட வேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நாளை

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நாளை(03) ஆரம்பிக்கப்படவுள்ளது. நாட்டரிசி நெல் 1கிலோகிராம்  120 ரூபாவிற்கும்...

IMF தரும் மகிழ்ச்சி செய்தி

இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) குறித்த நான்காவது மதிப்பாய்வை சர்வதேச...

நோர்வூட் பிரதேச சபையில் இ.தொ.கா. விரைவில் ஆட்சியமைக்கும்!

‘‘நுவரெலியா மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இ.தொ.காவும், தேசிய மக்கள் சக்தியும்...

தமிழக மீனவர்கள் 7 பேர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த 2 தினங்களுக்கு 400-க்கும் மேற்பட்ட...