ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் அகதிகளாக தமிழகத்தில் தஞ்சம்

Date:

நாட்டில் இருந்து அகதிகளாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 குழந்தைகள் உட்பட ஐந்து பேர் தமிழகத்தில் இன்று புதன்கிழமை (7) காலை தஞ்சமடைந்துள்ளனர்.

அவர்களை மீட்டு தமிழக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

நாட்டில் ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த 2022 ஆண்டு மார்ச் மாதம் முதல் தமிழர்கள் தனுஷ்கோடிக்கு அகதிகளாக சென்ற வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் நேற்று புதன்கிழமை (6) மாலை மன்னாரில் இருந்து படகில் புறப்பட்டு இன்றைய தினம் அதிகாலை ராமேஸ்வரம் அடுத்துள்ள தனுஷ்கோடி அரிச்சல்முனை ஒன்றாம் மணல் திட்டில் கடற்கரையை சென்றடைந்தனர்.

தகவலறிந்த ராமேஸ்வரம் மரைன் பொலிஸார் அவர்களை மீட்டு மண்டபம் மரைன் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாதுகாப்பு வட்டார அதிகாரிகளின் விசாரணைக்கு பிறகு 5 பேரும் மண்டபம் அகதிகள் முகாமில் ஒப்படைக்கப்பட உள்ளனர்.

பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு சென்ற அகதிகளின் எண்ணிக்கை 293 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தமிழக மீனவர்கள் 7 பேர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த 2 தினங்களுக்கு 400-க்கும் மேற்பட்ட...

பஸ் கட்டண திருத்தம்?

எரிபொருள் விலை திருத்தத்துடன் பஸ் கட்டண திருத்தம் தொடர்பாக அடுத்த 2...

கஹாவத்தை துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

கஹவத்த பகுதியில் நேற்று இரவு (30) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்...

எரிபொருள் விலை உயர்வு

இன்று (30) நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பெற்றோலிய கூட்டுத்தாபனம்...