பெரிய வெங்காயத்தின் விலை உயர்வு!

0
169

சந்தையில் கிலோ ஒன்றுக்கு 330 ரூபாவாக இருந்த பெரிய வெங்காயத்தின் விலை நேற்று (பிப்ரவரி 15) 420 ரூபாவாக அதிகரித்துள்ளதாக சந்தைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்துக்கு தட்டுப்பாடு மற்றும் பாகிஸ்தான் வெங்காயத்தின் விலை அதிகரிப்பு காரணமாக பெரிய வெங்காயத்தின் விலை 420 ரூபா வரை அதிகரித்துள்ளதாகவும் விலை மேலும் அதிகரிக்கும் என மொத்த வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் விலை 420 – 440 ரூபாவாக இருந்ததாகவும், இந்த தட்டுப்பாடு தொடருமானால் ஒரு கிலோவின் சில்லறை விலை மீண்டும் 600 ரூபாவாக உயரும் எனவும் தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தின் மொத்த விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் விலை திடீரென 80 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளமைக்கான காரணம் ஆராயப்பட வேண்டிய விடயம் என தேசிய நுகர்வோர் முன்னணியின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here