நீச்சல் மூலம் பாக்கு நீரிணையை கடந்து மக்கள் இடையே விழிப்புணரவை ஏற்படுத்த உள்ளதாக ஹரிகரன் தன்வந்த் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் மார்ச் மாதம் 01ஆம் திகதி இந்திய தனுஷ்கோடியிலிருந்து அதிகாலை 12.05க்கு நீச்சலை ஆரம்பித்து, மதியம் தலைமன்னார் டியர் என்ற இடத்தில் நீச்சலை நிறைவுசெய்ய எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
யாழ்ப்பாண ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகசந்திப்பில் கருத்து தெரிவித்த அவர்,
நான் ஈ.சி.டி.திருகோணமலை இந்துக் கல்லூரியில் எட்டாம் தரத்தில் கல்வியினை கற்று வருகின்றேன். கடந்த நான்கு வருடங்களாக நீச்சல் பயிற்சி பெற்று வருகின்றேன்.
நீச்சலில் பாக்கு நீரிணையை கடந்து, இளைஞர்கள் மட்டத்தில் அதிகரித்துவரும் போதைவஸ்து பாவனையில் இருந்து மீள்வதற்கான விழிப்புணர்வூட்டும் வகையில் இந்த நீச்சல் காணப்படும்.
அத்துடன் கடற்பரப்பில் வெற்று பிளாஸ்டிக்கழிவுப் பொருட்களை அகற்றி கடற்பரப்பின் சுத்தமாக வைத்துயிருப்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தல், கடல்வாழ் ஆமைகளை பாதுகாத்தல், முருங்கற் பாறைகளின் முக்கியத்துவத்தின் பேணுதல் தொடர்பாகவும் விழிப்புணர்வு எற்படுத்து இந்த நீச்சலின் நோக்கம் எனக் குறிப்பிட்டுள்ளார்.