ரணிலுடன் இணைந்து செயற்பட தயார் – SJB

Date:

மொட்டு கட்சியை பாதுகாப்பதைக் கைவிட்டால் ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என சமகி ஜன பலவேக தெரிவித்துள்ளது.

விக்கிரமசிங்கவின் கொள்கைகளும் தமது கட்சியின் கொள்கைகளும் ஒன்றே என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆனால் மொட்டு கட்சியை பாதுகாப்பதால் அவருடன் இணக்கப்பாட்டுக்கு வரமுடியாது எனவும் அந்த பாதையை கைவிட்டால் அவருடன் கலந்துரையாடி அடுத்தகட்ட நடவடிக்கையை மேற்கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பாராளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மே மாதத்தில் தேசிய பணவீக்கம் 5.4% ஆக உயர்வு

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் (NCPI) அடிப்படையில், 2026 மே மாதத்தில்...

இலங்கை மீது இந்தியா அதிருப்தியில்!!

இந்தியாவுடன் எட்டப்பட்ட ஒப்பந்தங்களை நடைமுறைப்படுத்துவதில் தாமதம்; இந்தியா அதிருப்தியில் இருப்பதாக தகவல் இலங்கை...

எரிபொருள் விலையில் மாற்றம் செய்ய வாய்ப்பில்லை

தற்போது இலங்கையில் நடைமுறையில் உள்ள எரிபொருள் விலையில் குறிப்பிடத்தக்க அளவில் மாற்றம்...

கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை குறித்த சர்ச்சை தொடர்கிறது!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் மற்றும் கர்தினால் தொடர்பான விமர்சனங்கள் உயிர்த்த ஞாயிறு...