சுமந்திரன் எம்.பியின் தாயார் கொழும்பில் காலமானார்!

Date:

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனின் தாயார் புஷ்பராணி மதியாபரணன் (வயது 85) இன்று மதியம் 1:30 மணியளவில் கொழும்பு – தெகிவளையில் தனது மகளின் இல்லத்தில் காலமானார்.

முதுகுத் தண்டு சத்திர சிகிச்சையின் பின்னர் கடந்த இரண்டு வருட காலமாகப் படுக்கையில் இருந்த அவர், இன்று பிற்பகல் உலகை விட்டுப் பிரிந்தார்.

அவரது இறுதிச் சடங்கு பெரும்பாலும் நாளைமறுதினம் வியாழக்கிழமை கொழும்பில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தமது கணவர், ஒரே மகள் மற்றும் ஒரே மகனையும் அவர்களது குடும்பத்தவர்களையும் விட்டு அவர் பிரிந்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

எம்மை பயமுறுத்தி வாயடைக்க முடியாது

அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என பொதுஜன பெரமுனையின்...

ஹெலிகாப்டர் கொள்வனவு செய்ய சிங்கப்பூர் சென்றுள்ள டட்லி

அடிக்கடி செய்திகளில் இடம்பெறும் கோடீஸ்வர தொழிலதிபர் டட்லி சிறிசேன ஹெலிகாப்டர் ஒன்றை...

சபாநாயகர் செய்யும் ஊழல் அம்பலம்

பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள பாராளுமன்ற துணைச் செயலாளர் சாமிந்த குலரத்ன, சபாநாயகர்...

ஷிரந்திக்கு FCID நாமலுக்கு CID அழைப்பு

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ இன்று (03)...