சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளிக்க தேசிய மக்கள் சக்தி மற்றும் சுதந்திர ஜனதா சபையும் தீர்மானித்துள்ளன.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த சுதந்திர ஜனதா சபையின் தலைவர் மாத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும, நம்பிக்கையில்லா பிரேரணைக்கு நிச்சயமாக ஆதரவளிப்பதாக கூறினார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சிவஞானம் சிறீதரன், எதிர்காலத்தில் கட்சி கூடி இது தொடர்பில் முடிவெடுக்கும் என்றார்.
இந்த பிரேரணைக்கு தாம் ஆதரவளிப்பதாக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
இணையவழி பாதுகாப்பு சட்டமூலத்தை நிறைவேற்றியதில் சபாநாயகர் அரசியலமைப்பை மீறியுள்ளதாகவும், அவருக்கு எதிராக இந்த நம்பிக்கையில்லா பிரேரணை சமர்ப்பிக்கப்படும் எனவும் ஜன பலவேய கட்சி தெரிவித்துள்ளது.
இந்த நம்பிக்கையில்லா பிரேரணை இந்த வாரம் பாராளுமன்ற பொதுச் செயலாளரிடம் கையளிக்கப்பட உள்ளது.