பல்கலைக்கழக மாணவர்கள் மீது கண்ணீர் புகை குண்டு வீச்சு

0
70

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய போராட்டத்தை கலைக்க பொலிஸார் நீர் மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மனிதநேய மற்றும் சமூகவியல் பீட மாணவர் ஒன்றியம், விடுதிகளின் பிரச்சினைகள், மஹாபொல உதவித்தொகை, சிற்றுண்டிச்சாலைகள் மற்றும் கல்வி நலன்களில் தாமதம் ஆகியவற்றிற்கு தீர்வு காணுமாறு கோரி இந்த எதிர்ப்பு ஊர்வலத்தை ஏற்பாடு செய்திருந்தது.

ஶ்ரீ ஜயவர்தனபுர கோட்டே பல்கலைக்கழகத்திற்கு அருகாமையில் ஆரம்பிக்கப்பட்ட பேரணியானது ஹைலெவல் வீதியில் பிரவேசித்ததையடுத்து, அதனைத் தடுப்பதற்காக பொலிஸார் விசேட பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

மாணவர்கள் தொடர்ந்து வரவே, போலீசார் தண்ணீர் மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here