பொலிஸாரின் அதிகாரங்களைத் தவிர்த்து அதிகாரப் பகிர்வு தொடர்பில் செயற்பட முடியும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் ஏனைய கட்சிகளுடன் இணக்கப்பாடு ஏற்படுத்தி மூன்றில் இரண்டு பங்கு அதிகாரத்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவித்த ஜனாதிபதி காணி அதிகாரங்கள் தொடர்பில் தேசிய காணி ஆணைக்குழு சட்டத்தின் பிரகாரம் செயற்படுவதாகவும் தெரிவித்தார்.
இது தொடர்பில் அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் தமிழ் கட்சி தலைவர்களுடன் கலந்துரையாடவுள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி, சகவாழ்வின் கடைசி பகுதியை தற்போது நிறைவேற்ற வேண்டியுள்ளதாகவும் தெரிவித்தார்.
‘நல்லிணக்கத்திற்கான மதங்கள்’ என்ற தொனிப்பொருளில் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டப வளாகத்தில் நடைபெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான சர்வமத மாநாட்டில் ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.