வெடுக்குநாறிமலையில் அரங்கேறிய பொலிஸ் அராஜகத்தைக் கண்டித்து நல்லூரில் போராட்டம்!

Date:

வவுனியா வடக்கு – வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் அரங்கேறிய பொலிஸ் அராஜகத்தைக்  கண்டித்து யாழ்ப்பாணம் – நல்லூரில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் தவத்திரு .அகத்தியர் அடிகளாரின் அழைப்பின் பேரில் நல்லை ஆதீனம் முன்பாக நேற்று மாலை 4 மணிக்குப் போராட்டம் ஆரம்பமானது. .

இந்தப் போராட்டத்தில் மதகுருமார், சமயத் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், சிவில் சமூகப் பிரதிநிதிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

மகா சிவராத்திரி பூஜையின்போது வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்துக்கு வழிபடச் சென்றவர்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட அட்டூழியங்களைக் கண்டித்தும், கைது செய்யப்பட்ட 8 பேரை உடன் விடுதலை செய்யுமாறு வலியுறுத்தியும் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஸ்ரீ தலதா மாளிகையின் தியவதன நிலமேவாக பிரதீப் நிலங்க தெலே மீண்டும் தெரிவு

கண்டியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையின் தியவதன நிலமேவாக...

இலங்கை சுங்கத்துறை வசூல் சாதனை

இலங்கை சுங்கத்துறை நேற்று (06) ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவுக்கு...

குடு விற்பனை செய்யும் NPP அரசாங்க தரப்பு

நாட்டில் போதைப்பொருள் தொற்றுநோயை ஒழிக்க அரசாங்கம் கட்சி சார்பற்ற முறையில் செயல்படுவதை...

NPP கொலன்னா பிரதேச சபை முதல் பட்ஜெட் தோற்கடிப்பு

தேசிய மக்கள் சக்தி கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள கொலன்னா பிரதேச சபையின்...