அநுர கனடா செல்வதற்கு முன் சந்தித்த முக்கிய பிரபலம்

Date:

மக்கள் விடுதலை முன்னணி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க இன்று (13) முற்பகலில் கட்சி அலுவலகத்தில் இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஷ்வை (Eric Walsh) சந்தித்தார்.

இந்த சந்திப்பில் இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் இரண்டாவது செயலாளர் (அரசியல்) தபெற்றிக் பிக்கரிங்கும் (Patrick Pickering) தேசிய மக்கள் சக்தியின் சார்பாக எம்பி விஜித ஹேரத்தும் பங்கேற்றனர்.

இலங்கையில் நிலவுகின்ற சமூக பொருளாதார மற்றும் அரசியல் நிலைமை பற்றி விரிவான உரையாடல் இடம்பெற்றதோடு தேசிய ஒற்றுமையைக் கட்டியெழுப்புவதற்கான தேசிய மக்கள் சக்தியின் திட்டங்கள் பற்றியும் இருதரப்பினருக்கும் இடையில் கருத்துக்கள் பரிமாற்றிக்கொள்ளப்பட்டன.

கனடாவில் வசிக்கின்ற இலங்கையரை சந்திப்பதற்கான எமது எதிர்கால கனடா விஜயத்திற்கு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்ளவும் உயர்ஸ்தானிகர் இதனை ஒரு சந்தர்ப்பமாகப் பயன்படுத்திக்கொண்டார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சட்டத்தரணிகள் எடுத்துள்ள அதிரடி முடிவு!

நாளை (16) நீதிமன்ற நடவடிக்கைகளில் இருந்து விலகத் தீர்மானித்துள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள்...

இந்தியா–பாகிஸ்தான் உறவுகளை மீண்டும் தொடங்க இலங்கை மத்தியஸ்தம்

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான இருதரப்பு உறவுகளை மீண்டும் ஆரம்பிப்பதற்காக இலங்கையை...

மகத்தான விரதமான மகா சிவராத்திரி இன்று

இந்து தர்மத்தில் சிவபெருமானுக்குரிய முக்கிய விரதங்களில் மிகவும் மகத்தான விரதமாக மகா...

ஜிந்துப்பிட்டியில் மீண்டும் ஒருவர் சுட்டுக் கொலை

கொழும்பு - ஜிந்துப்பிட்டிய பகுதியில் இன்று (14) இரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச்...