விஜயதாச ராஜபக்ஷவின் மகனுக்குச் சொந்தமான வங்கிக் கணக்குகள் முடக்கம்

0
25

முன்னாள் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் மகன் ரகித ராஜபக்ஷவுக்குச் சொந்தமான பல வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

குற்றச் செயல்கள் மூலம் ஈட்டப்பட்ட பணம் அல்லது சொத்துக்கள் தொடர்பான சட்ட ஏற்பாடுகளின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு (CIABOC) முன்னெடுத்து வரும் விசாரணைக்கு அமைவாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த விசாரணையின் ஒரு பகுதியாக, வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளமை தொடர்பில் அறிவிப்பதற்காக ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழுவொன்று நேற்று நாவலையில் அமைந்துள்ள ரகித ராஜபக்ஷவின் வீட்டுக்குச் சென்றுள்ளது.

எனினும், அதிகாரிகள் அறிவிப்பை வழங்குவதற்காக வீட்டுக்குச் சென்றிருந்த சந்தர்ப்பத்தில் ரகித ராஜபக்ஷ அங்கு இருக்கவில்லை என இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here