கோப் குழுவில் இருந்து அனுரகுமாரவும் விலகினார்!

Date:

தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்கவும் பொது நிறுவனங்கள் தொடர்பான குழு அல்லது கோப் குழுவின் உறுப்புரிமையில் இருந்து விலகியுள்ளார்.

அதன்படி கோப் குழுவின் 30 பேரில் இருந்து இதுவரை 10 பேர் விலகியுள்ளனர்.

வசந்த யாப்பா பண்டார மற்றும் துமிந்த திசாநாயக்க ஆகியோரும் இன்று காலை கோப் குழு உறுப்புரிமையிலிருந்து விலகினர்.

அதேநேரம் முன்னதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கீழ் பாராளுமன்றத்திற்கு தெரிவான காமினி வலேபொட, பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் , ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான எரான் விக்கிரமரத்ன, ஹேஷா விதானகே மற்றும் எஸ். எம்.மரிக்கார், பாராளுமன்ற உறுப்பினர் சரித ஹேரத் மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர ஆகியோரும் கோப் குழுவில் இருந்து விலகினர்.

கோப் குழுவின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன நியமைக்கப்பட்டமையை அடுத்து இவ்வாறு அதன் உறுப்பினர்கள் பதவி விலகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தமிழக மீனவர்கள் 7 பேர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த 2 தினங்களுக்கு 400-க்கும் மேற்பட்ட...

பஸ் கட்டண திருத்தம்?

எரிபொருள் விலை திருத்தத்துடன் பஸ் கட்டண திருத்தம் தொடர்பாக அடுத்த 2...

கஹாவத்தை துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

கஹவத்த பகுதியில் நேற்று இரவு (30) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்...

எரிபொருள் விலை உயர்வு

இன்று (30) நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பெற்றோலிய கூட்டுத்தாபனம்...