காத்தான்குடியில் முஸ்லிம்களை மனம் மகிழ வைத்த ஆளுநரின் இஃப்தார்!

Date:

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் ஏற்பாட்டில் காத்தான்குடி மத்திய கல்லூரி மைதானத்தில் இன்று வெள்ளிக்கிழமை விசேட இப்தார் நோன்பு திறப்பு நிகழ்வு இடம்பெற்றது.

ரமழான் மாதம் தொடங்கி 11 நாட்கள் நிறைவடைந்துள்ளது. ஒவ்வொரு நாளும் பல்வேறு இடங்களில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சிகள் கிழக்கில் இடம்பெற்று வருகிறது.

இந்த நிலையில், இன்றைய இப்தார் நிகழ்வில் ஐந்தாயிரத்திற்கும் அதிகமான முஸ்லிம்கள் பங்குபற்றினர்.

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், அமைச்சர் அலி சப்ரி, மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர் டட்டுக் சரவணன், முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் இஸ்புல்லா, நாடாளுமன்ற உறுப்பினர் ஹபீப் முஹம்மட், முஹம்மட் ஹரீஸ், மௌலானா ஆகியோர் கலந்து கொண்டனர்.

பள்ளிவாசல் சம்மேளனம், வர்த்தக சமமேளனம், ஜம்மியத் துல் உலமா காத்தான்குடி கிளை உட்பட அரச திணைக்களங்களின் ஒத்துழைப்புடன் இந்நிகழ்வு இடம்பெற்றது.

இதன் போது கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் அமைச்சர் அலி சப்ரி மற்றும் மலேசியா பாராளுமன்ற உறுப்பினர் டட்டுக் சரவணன் ஆகியோருக்கு அல் குரான் அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டது.

இதேவேளை இப்தார் மாதத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் காஸா குழந்தைகள் நிதியத்திற்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் 5 இலட்சம் ரூபாய் அன்பளிப்பாக வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கர்நாடக துணை முதல்வருடன் செந்தில் தொண்டமான் சந்திப்பு

இலங்கை தொழிலாளார் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான் கர்நாடக துணை முதல்வர்...

ஜான் கீல்ஸ் சிஜி ஆட்டோ பிரைவேட் லிமிடெட்டின் BYD வாகன ஷோரூம் முன் போராட்டம்

கொழும்பில் உள்ள ஜான் கீல்ஸ் சிஜி ஆட்டோ பிரைவேட் லிமிடெட்டின் BYD...

நாகை மீனவா்கள் 31 பேர் இலங்கையில் கைது

எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, நாகை மீனவா்கள் 31 பேரை இலங்கை...

தாய்லாந்தில் கைதான முக்கிய புள்ளி

குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் குழு, தாய்லாந்தில் சமூக ஊடக ஆர்வலர்...