கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் வறட்சியான காலங்களில் விவசாயிகளின் பயிர்ச்செய்கைக்கு உதவும் வகையில் அம்பாறை லாகுகல நுகே வெவ குளத்தை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மக்கள் பாவனைக்காக கையளித்தார்.
8 மில்லியன் ரூபா செலவில் இக்குளம் புனரமைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் விவசாய அமைச்சின் செயலாளர் முத்துபண்டா, கடற்தொழில் மற்றும் நீரியல் வள மீன்பிடி திணைக்கள பணிப்பாளர் சுதாகரன் உட்பட அரச அதிகாரிகள் கலந்து கொண்டனர்.