நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள கலகொட அத்தே ஞானசார தேரர் சுகவீனம் காரணமாக சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஞானசார தேரரை பார்வையிட வந்த ராவணா பலய அமைப்பின் செயலாளர் நாயகம் இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஞானசார தேரர் இதற்கு முன்னரும் உடல் நலக் குறைவினால் பாதிக்கப்பட்டிருந்தார் எனவும், அதற்கான சிகிச்சைக்காகவேஅவர் சிறைச்சாலையில் உள்ள வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கொழும்பு மேல் நீதிமன்றம் வழங்கிய தண்டனைக்கு எதிராக கலகொடஅத்தே ஞானசார தேரர் மேன்முறையீடு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.