மக்கள் ரணிலை ஏற்கனவே தெரிவு செய்துவிட்டனர்

Date:

அரசியல்வாதிகளால் விநியோகிக்கப்படும் பொருட்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என கூறிய அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுக்கும் வகையில் செயற்பட்ட ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதியாக மக்கள் ஏற்கனவே தெரிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.

களனியில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரிசி வழங்கும் நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.

கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அவர், தேர்தலை இலக்கு வைத்து அரிசி விநியோகம் செய்யவில்லை என்றும், பல்வேறு அரசியல் சித்தாந்தங்களை கொண்டவர்கள் இந்த திட்டத்தால் பயனடைவதாகவும் தெரிவித்தார்.

“நாங்கள் தேர்தலை இலக்கு வைத்து இதை செய்யவில்லை. பல்வேறு அரசியல் சித்தாந்தங்களை கொண்டவர்கள் இங்கு உள்ளனர். பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டாலும் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள். மக்கள் ஏற்கனவே ரணில் விக்கிரமசிங்கவை தேர்ந்தெடுத்துள்ளனர். அவரால்தான் பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுக்க முடியும்” என்று அவர் வலியுறுத்தினார் கூறினார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இறக்குமதி ஒழுங்குகள் குறித்து ஜனாதிபதி விடுத்துள்ள வர்த்தமானி அறிவித்தல்

இலங்கையிலிருந்து மேற்கொள்ளப்படும் இறக்குமதிகள் தொடர்பான வெளிநாட்டு நாணயக் கொடுப்பனவுகளை மிகவும் திறம்படக்...

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான அமெரிக்க விசாரணை அறிக்கைகளை அரசு பெற்றுள்ளதா?

2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக, அப்போது...

ரணிலிடம் மீண்டும் ஆட்சியை ஒப்படைக்க நாட்டு மக்கள் தயாரில்லை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் மீண்டும் நாட்டின் ஆட்சிப் பொறுப்பை வழங்க...

அமெரிக்கா – ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் கைச்சாத்து

மேற்கு ஆசிய பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழலை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில்,...