ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இராஜினாமா செய்யத் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நீதிமன்றத்தின் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியில் மைத்திரிபால சிறிசேனவுக்கு தொடர முடியாது.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தலைமையிலான தரப்பு அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வாவை பதில் தலைவராக நியமித்துள்ளது.
மைத்திரியின் தரப்பு அமைச்சர் விஜேதாசவை பதில் தலைவராக நியமித்துள்ளது. இதன்காரணமாக மைத்திரிபால தலைவர் பதவியில் இருந்து விலக உள்ளார்.