மது விற்பனை அனுமதி பத்திரங்கள் விற்பனை செய்த எதிர்க்கட்சி எம்பிக்கள்

0
42

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும், சமகி ஜன பலவேகயவும் தமது நண்பர்கள் மற்றும் வர்த்தகர்களுக்கு கமிஷன் அடிப்படையில் மதுபான அனுமதிப்பத்திரங்களை வழங்க தலையிட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

புதிய மது விற்பனை நிலையங்கள் அமைப்பது குறித்தும், உரிமம் பெற உதவியவர்கள் குறித்தும் மதத் தலைவர்கள் நடத்திய விசாரணையில் இந்த உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.

இந்த மதுபான அனுமதிப்பத்திரங்களைப் பெறுவதற்கு வர்த்தகர்களுக்கு உதவிய பல சமகி ஜன பலவேக எம்.பி.க்கள் குறித்தும் தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவரும், சமகி ஜன பலவேக தலைவருமான சஜித் பிரேமதாசவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பில் அவதானிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here