ரணில் – பசில் இன்று மீண்டும் சந்திப்பு

0
140

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.

இன்று பிற்பகல் 4 மணியளவில் குறித்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதியின் வேண்டுகோளுக்கு இணங்க இந்தச் சந்திப்பு நடைபெறவுள்ளதாகவும், இது தீர்மானமிக்க சந்திப்பொன்றாகக் காணப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகள் தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்படவுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் பசில் ராஜபக்ஷவுக்கும் இடையில் முன்னதாக பல சந்திப்புகள் இடம்பெற்றிருந்த போதும் அவை இணக்கப்பாட்டின்றி நிறைவடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here