தமிழகம் – இலங்கை இடையே பயணிகள் படகு சேவை: மே 13ஆம் திகதி மீண்டும் தொடக்கம்

Date:

நாகப்பட்டினம் மற்றும் காங்கேசன்துறை இடையேயான பயணிகள் கப்பல் சேவை 40 ஆண்டுகளுக்குப் பின்னர் கடந்த ஒக்டோபர் மாதம் மீண்டும் தொடங்கப்பட்டு சில நாட்களில் இடைநிறுத்தப்பட்டது.

இந்த நிலையில் எதிர்வரும் மே 13ஆம் திகதிமுதல் இந்த சேவை மீண்டும் தொடங்கப்பட உள்ளது.

கடந்த ஆண்டு ஒக்டோபர் 14ஆம் திகதி, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நாகப்பட்டினம் மற்றும் காங்கேசன்துறை இடையேயான சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

ஆறு மாத இடைவெளிக்குப் பின்னர் கப்பல் சேவை மீண்டும் தொடங்க உள்ளது. சென்னையைச் சேர்ந்த, IndSri Ferry Services Private Limited என்ற நிறுவனம் இந்த கப்பல் சேவையை இயக்க உள்ளது.

கப்பல் சேவை தினமும் மேற்கொள்ளப்படும். மே 13 முதல் நவம்பர் 15ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் மேற்கொள்ளப்படும் பயணங்களுக்கு எங்கள் இணையதளமான sailindsri.com டிக்கெட் விற்பனை திறந்திருக்கும் என IndSri Ferry Services Private Limited இன் நிர்வாக இயக்குநர் எஸ்.நிரஞ்சன் நந்தகோபன் தெரிவித்துள்ளார்.

பயணிகள் 60 கிலோ எடையுள்ள பொதிகளை கட்டணமின்றி எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். மேலும், திட்டமிடப்பட்ட பயணத்திற்கு 72 மணி நேரத்திற்கு முன்னதாக அவர்கள் பயணத் திகதியை மாற்ற அனுமதிக்கப்படுகிறார்கள். இந்த காலக்கட்டத்தில் ரத்து செய்தால் மட்டுமே முழுப் பணத்தையும் திரும்பப் பெற முடியும் என்றும் நிறுவனம் அறிவித்துள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சட்டத்தரணிகள் எடுத்துள்ள அதிரடி முடிவு!

நாளை (16) நீதிமன்ற நடவடிக்கைகளில் இருந்து விலகத் தீர்மானித்துள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள்...

இந்தியா–பாகிஸ்தான் உறவுகளை மீண்டும் தொடங்க இலங்கை மத்தியஸ்தம்

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான இருதரப்பு உறவுகளை மீண்டும் ஆரம்பிப்பதற்காக இலங்கையை...

மகத்தான விரதமான மகா சிவராத்திரி இன்று

இந்து தர்மத்தில் சிவபெருமானுக்குரிய முக்கிய விரதங்களில் மிகவும் மகத்தான விரதமாக மகா...

ஜிந்துப்பிட்டியில் மீண்டும் ஒருவர் சுட்டுக் கொலை

கொழும்பு - ஜிந்துப்பிட்டிய பகுதியில் இன்று (14) இரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச்...