கேஸ் விலைகள் குறைப்பு

Date:

இன்று (03) நள்ளிரவு முதல் எரிவாயு விலையை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் இதனை இன்று (03) அறிவித்தார்.

இதன்படி, தற்போது 4,115 ரூபாயாக விற்பனை செய்யப்படும் 12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 3,940 ரூபாயாகும்.

அத்துடன், 5 கிலோகிராம் எடை கொண்ட சிலிண்டரின் விலை ரூ.70 குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை ரூ.1,582 ஆகும்.

மேலும், 2.3 கிலோகிராம் எடையுள்ள எரிவாயு சிலிண்டரின் விலை 32 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 740 ரூபாயாகும்.

லாப் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் இன்று (03) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைக்கப்படுவதாக லாப் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதன்படி, 12.5 KG எடையுடைய லாஃப் சிலிண்டரின் விலை 275 ரூபாவால் குறைக்கப்படுவதுடன், அதன் புதிய விலையாக 3,840 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், 5 KG எடையுடைய லாஃப் சிலிண்டரின் விலை 110 ரூபாவால் குறைக்கப்படுவதுடன், அதன் புதிய விலையாக 1,542 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இன்றும் மழை நீடிக்கும்

இன்றையதினம் (23) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை,...

IMF கடன் கிடைத்த கையோடு விலை கிடுகிடுவென உயரும்

தற்போதைய அரசு சர்வதேச நாணய நிதியத்திலிருந்து (IMF) கடன் தவணைகளான இரண்டையும்...

SJBயிடம் தோல்வியுற்ற NPP

ஹிரியால பல்நோக்கு சேவை கூட்டுறவு சங்கத்தின் இயக்குநர் சபையைத் தேர்ந்தெடுக்க இன்று...

அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறை

இலங்கையிலுள்ள அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 27 ஆம் திகதி புதன்...