அமைச்சர் டிரான் அலஸ் கொடுக்கும் விளக்கம்

0
159

On Arrival விசா வசதி தொடர்பான சர்ச்சைக்குரிய சூழ்நிலை குறித்து பொதுப் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் விசேட ஊடகவியலாளர் மாநாடு ஒன்றை நடத்தினார்.

அங்கு உரையாற்றிய அமைச்சர், புதிய விசா முறை தொடர்பான பிரேரணை பாராளுமன்றத்தில் விவாதம் இன்றி நவம்பர் 23 ஆம் திகதி ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதாக குறிப்பிட்டார்.

விசா கட்டண விவகாரமும் ஏற்றுக்கொள்ளப்பட்ட திட்டங்களின் ஒரு பகுதியாகும், ஆனால் அது நவம்பரில் நிறைவேற்றப்பட்டது, ஆனால் ETA அல்லது மின்னணு பயண ஒப்புதல் முறை மூலம் மாற்றத்தை செயல்படுத்த முடியாது, எனவே நாங்கள் ஏப்ரல் 17 வரை VFS அமைப்பு மூலம் அதை செய்ய காத்திருக்க வேண்டியிருந்தது என்று அமைச்சர் கூறினார்.

ETA அமைப்பில் உள்ள குறைபாடுகள் காரணமாக இந்த முறையை மாற்றுவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டதாகவும் அமைச்சர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here