தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட சந்தேகநபர்களுக்கு எதிராக கொலைக் குற்றச்சாட்டின் கீழ் வழக்குத் தொடரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தரமற்ற ஆன்டிபயோடிக் ஊசிகளை நோயாளர்களுக்கு செலுத்தி அவர்களின் வாழ்க்கையை பாதுகாப்பற்றதாக மாற்றிய சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வரும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இவர்கள் செய்த குற்றமானது இனப்படுகொலைக் குற்றத்தின் வகையைச் சேர்ந்தது எனவும், அதன்படி இவர்களுக்கு எதிரான சட்டத்தை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பது குறித்து திணைக்களம் ஆராய்ந்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தரமற்ற மருந்துகளால் பல நோயாளிகள் இறந்துள்ளனர் மற்றும் கிட்டத்தட்ட நூறு பேர் நிரந்தர ஊனமுற்றுள்ளனர் என்றும் கூறப்படுகிறது.