காலநிலை மாற்றம்

Date:

ரெமால் சூறாவளியின் தாக்கம் நாளை (30) முதல் குறைவடையுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

தென்மேற்கு பருவப்பெயர்ச்சியின் காரணமாக, எதிர்வரும் இரண்டு அல்லது மூன்று தினங்களில் நாட்டின் தென்மேற்கு பிராந்தியத்தில் மழையுடனான வானிலை நிலவும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதனிடையே, மழையுடனான வானிலை காரணமாக 10,483 குடும்பங்களை சேர்ந்த 39,156 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கம்பஹா மாவட்டத்திலேயே அதிகளவானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, 8 மாவட்டங்களின் சில பிரதேச செயலகங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு, காலி, கம்பஹா, களுத்துறை, கண்டி, கேகாலை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் சில பிரதேச செயலக பிரிவுகளுக்கே இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

எரான் தலைமையில் ஸ்ரீலங்கா கிரிக்கெட் இடைக்கால நிர்வாகம்

இலங்கை கிரிக்கெட்டில் பரவலான மாற்றங்களை கொண்டு வருவதற்காக விளையாட்டு துறை அமைச்சரினால்...

அர்ச்சுனா எம்பி பிணையில் விடுவிப்பு

யாழ்ப்பாணம், பெரியவிளான் பகுதியில் இடம்பெற்ற காணித் தகராறின் போது, பெண் ஒருவரைத்...

600,000 அமெரிக்க டொலர் மாயம்! விசாரணை தீவிரம்!!

இலங்கைத் அஞ்சல் திணைக்களத்தினால் அமெரிக்கத்அஞ்சல் சேவைக்கு வழங்கப்பட்ட பணத்தில் மேலும் 600,000...

மீண்டும் மின்சார கட்டண உயர்வு

இலங்கையில் மீண்டும் மின்சார கட்டண உயர்வு தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் நடைபெற்று...