ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் விசேட மத்திய குழு கூட்டம் இன்று

Date:

நிமல் சிறிபால டி சில்வா தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இன்று (02) விசேட மத்திய குழு கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.

கொழும்பு டாலி வீதியிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளதுடன், மத்திய குழு உறுப்பினர்கள் தவிர அனைத்து தொகுதி அமைப்பாளர்களையும் கலந்துகொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் பொருளாளரும் இராஜாங்க அமைச்சருமான லசந்த அழகியவண்ண தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையில் அமைக்கப்படவுள்ள புதிய கூட்டணியின் முதலாவது பொதுக்கூட்டம் எதிர்வரும் 8ஆம் திகதி ஹம்பாந்தோட்டையில் நடைபெறவுள்ளதாகவும், இன்று நடைபெறும் மத்திய குழுக் கூட்டத்தில் அது குறித்து ஆராயப்படும் எனவும் அழகியவண்ண மேலும் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், நீதிமன்ற உத்தரவு காரணமாக தலைவர் பதவியை இழந்துள்ள முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்றைய மத்திய குழு கூட்டம் சட்டபூர்வமானது அல்ல என தெரிவித்துள்ளார்.

கட்சியின் சிறுபான்மையினரால் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய குழு கூட்டத்தை அழைப்பதற்கு அவர்களுக்கு அதிகாரம் இல்லை எனவும் முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நோர்வூட் பிரதேச சபையில் இ.தொ.கா. விரைவில் ஆட்சியமைக்கும்!

‘‘நுவரெலியா மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இ.தொ.காவும், தேசிய மக்கள் சக்தியும்...

தமிழக மீனவர்கள் 7 பேர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த 2 தினங்களுக்கு 400-க்கும் மேற்பட்ட...

பஸ் கட்டண திருத்தம்?

எரிபொருள் விலை திருத்தத்துடன் பஸ் கட்டண திருத்தம் தொடர்பாக அடுத்த 2...

கஹாவத்தை துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

கஹவத்த பகுதியில் நேற்று இரவு (30) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்...