ரணிலுடன் செல்ல எனக்கு பைத்தியம் இல்லை!

Date:

எதிர்வரும் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இணையும் திட்டம் இல்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ரணில் விக்கிரமசிங்கவுடன் இணையும் அளவுக்கு தனக்கு பைத்தியம் இல்லை என்று சிறிசேன கூறுகிறார்.

அத்துடன், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யானைச் சின்னத்தில் ரணில் போட்டியிட மாட்டார் எனவும், தற்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தொடர்பில் நீதிமன்றத்தின் தீர்ப்பின் பிரகாரம், எதிர்கால செயற்பாடுகளை தமது கட்சியின் மக்களே தீர்மானிப்பார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ரணில் கட்சியின் சின்னத்தில் போட்டியிட முடியாது, வேறு சின்னத்தில் போட்டியிடுவார் அல்லது எதிர்வரும் தேர்தலில் போட்டியிட மாட்டார் என்றும் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மாளிகாவத்தையில் துப்பாக்கிச் சூடு

மாளிகாவத்தை ஜும்மா மஸ்ஜித் சாலையில், ஒரு வணிக இடத்தில் இருந்த இளைஞனை...

ஐக்கிய தேசியக் கட்சியின் இரண்டு முக்கியஸ்தர்கள் கைது?

இந்த வாரம் ஐக்கிய தேசியக் கட்சியின் இரண்டு முக்கியஸ்தர்கள் கைது செய்யப்படுவார்கள்...

திகதி மாற்றம் செய்த ஐதேக

எதிர்வரும் சனிக்கிழமை (06) நடைபெறவிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் 79வது ஆண்டு...

ஆகஸ்ட் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 20.4 சதவீதம் அதிகரிப்பு

ஆகஸ்ட் மாதத்தில் நாட்டிற்கு வந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 20.4...