மாங்குளத்தில் விபத்து – 3 பேர் பலி

Date:

முல்லைதீவு மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பனிக்கன் குளம் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சொகுசு பேருந்து ஒன்றுடன் பாரஊர்தி மோதி ஏற்பட்ட விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த அதிசொகுசு பேருந்து ஒன்று பழுதடைந்ததன் காரணமாக ஏ9 வீதியில் 228 வது கிலோமீற்றர் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்துள்ளது.

இதன்போது பேருந்தில் வருகை தந்தவர்கள் இறங்கி பேருந்தின் பின்புறமாக நின்று கொண்டிருந்த போது அதே திசையில் வருகை தந்த லொறி ஒன்று குறித்த நபர்கள் மீதும் பேருந்தின் மீதும் மோதியதில் வீதியில் நின்ற நபர்கள் மூவர் லொறியில் சிக்கி தூக்கி வீசப்பட்டு உடல்சிதறி பலியாகியுள்ளனர்.

லொறியின் சாரதி மற்றும் பேருந்தில் பயணித்த இன்னொருவர் என இருவர் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற மாங்குளம் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

20 ஆயிரம் ரூபாவால் குறைந்த தங்கம் விலை!

இலங்கையில் தங்கத்தின் விலை நேற்றுடன் (17) ஒப்பிடுகையில் 20,000 ரூபாவினால் குறைந்துள்ளதாக...

6வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் DP Education

இலங்கையின் முன்னணி ஆன்லைன் கல்வி தளமான DP Education, இன்று (அக்டோபர்...

மதுக்கடைகளுக்கு பூட்டு

தீபாவளி தினத்தன்று வட மாகாணத்திலுள்ள அனைத்து மதுபான சாலைகளையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியிடம்...

முதலாளிமார் சம்மேளனத்தை வன்மையாக கண்டிக்கும் செந்தில் தொண்டமான்!

இன்று தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான பேச்சுவார்த்தை சம்பள நிர்ணய...