ஜூலை இறுதிக்குள் தேர்தல் திகதி – ஆணைக்குழு வெளியிட்ட அறிவிப்பு

Date:

ஜூலை மாத இறுதிக்குள் ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தல் ஆணைக்குழுவில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க இதனை தெரிவித்தார்.

இந்த திகதியை நடைமுறைப்படுத்துவதில் வேறு எந்த காரணமும் பாதிப்பை ஏற்படுத்தாது என்றும் அவர் இதன்போது தெரிவித்தார்.

அரசியலமைப்பு மற்றும் ஜனாதிபதியின் சட்டத்தின் படி, இந்த தினங்களை எவரும் பரிசீலிக்க முடியும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வது தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து 16 முதல் 21 நாட்களுக்குள் மேற்கொள்ளப்படும்

வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட நாளிலிருந்து 4-6 வாரங்களுக்குள் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

குறி தவறிய துப்பாக்கிச் சூடு

களுத்துறை மாநகர சபைக்கு ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் சார்பில் போட்டியிடும்...

தபால் கட்டணம் உயர்வு

தபால் துறை நாளை (09) முதல் தபால் கட்டணங்களை உயர்த்த நடவடிக்கை...

மஞ்சள் கேஸ் விலை அதிகரிப்பு

நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் லாவ்ஸ் சமையல் எரிவாயுவின் விலை...

டில்வின் – ஜெய்சங்கர் இடையே சந்திப்பு

மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா உள்ளிட்ட இலங்கைப்...