மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவில் அமைந்துள்ள வீடொன்றில் வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
புனச்சோமுனி கிராமத்தில் உள்ள வீட்டுத் திட்டத்தில் வெடிப்பு நிகழ்ந்துள்ளது.
வீட்டின் அறையொன்றில் ஏற்பட்ட வெடிவிபத்தினால் பெரிய சேதம் எதுவும் ஏற்படவில்லை, ஆனால் பலத்த சத்தம் கேட்டுள்ளது.
வெடிப்பு சம்பவம் தொடர்பில் ஏற்கனவே விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.