ஜூலை 17ஆம் திகதிக்கு பின்னர் தேர்தலை நடத்துவதற்கான திகதியை அறிவிக்க தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ள நிலையில், அரசாங்கம் இந்த மாத இறுதி வரை ஆட்டம் போடும் என நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று (18) நடைபெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தின் பின்னர் கருத்து தெரிவிக்கும் போதே பாராளுமன்ற உறுப்பினர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ராகு காலம் காத்திருந்து தேர்தல் திகதியை நிர்ணயிக்கும் மரபு இல்லை என தெரிவித்த எம்.பி, கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் அரசியலமைப்பு திருத்தத்தை முன்வைப்பது தொடர்பில் கலந்துரையாடப்படாவிட்டாலும், அரசியலமைப்புத் திருத்தப் பிரேரணையை அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் முன்வைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.