தமிழ்ப் பொது வேட்பாளர் குறித்துதமிழரசு தீர்மானம் எடுக்கவில்லை- சுமந்திரன் எம்.பி. மீண்டும் தெரிவிப்பு

Date:

“தமிழர் தர்பில் இருந்து பொது வேட்பாளர் ஒருவரரை நிறுத்துகின்ற எந்தவொரு தீர்மானத்தையும் இலங்கைத் தமிழரசுக் கட்சி இதுவரையில் எடுக்கவில்லை.”- இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று (24) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற வியத்தில் தமிழரசுக் கட்சி இது சம்பந்தமாக இரண்டு மத்திய செயற்குழுக் கூட்டங்களிலே எடுத்த முடிவானது தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற விடயம் தொடர்பில் நாங்கள் எந்தத் தீர்மானமும் எடுக்கவில்லை என்பதாகும்.

நாங்கள் எடுத்த தீர்மானம் என்னவென்றால் ஜனாதிபதித் தேர்தலிலே நிற்கின்ற பிரதான வேட்பாளர்களோடு நாங்கள் பேரம் பேசி அவர்களுடைய தேர்தல் அறிக்கையிலே அவர்கள் சொல்லுகின்ற விடயங்களை  அவதானித்து யாருக்கு எங்கள் மக்கள் வாக்களிக்க வேண்டும் என்கின்ற செய்தியை அதற்குப் பின்னர் நாங்கள் அறிவிப்போம் என்று சொல்லியிருக்கின்றோம்.

அதன்படி பிரதான வேட்பாளர்களில் தங்களை வெளிப்படையாக அடையாளம் காட்டியிருக்கின்ற சஜித் பிரேமதாஸவோடும் மற்றது அநுரகுமார திஸாநாயக்கவோடும் எங்கள் கட்சி அலுவலகத்திலே உத்தியோகபூர்வமாக நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கின்றோம்.

அத்தோடு எங்களுடைய எதிர்பார்ப்புக்களை அவர்களுக்கு நாங்கள் சொல்லியிருக்கின்றோம். அவர்களுடைய தேர்தல் அறிக்கை வெளிவந்த பின்னர் என்னென்ன விடயங்கள் அதிலே உள்ளடக்கப்பட்டு இருக்கின்றன, எவற்றையெல்லாம் பகிரங்கப்படுத்தி சொல்லுகின்றார்கள் என்பதை அவதானிப்போம்.

ஆனால், வேறு எவரும் இன்னமும் தங்களை வேட்பாளர் என்று அறிவிக்கவில்லை. அப்படி அறிவிக்கின்ற பட்சத்தில் அவர்களோடும் இதே மாதிரியான பேச்சுவார்த்தையை நாங்கள் நடத்துவோம்.” – என்றார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஜனாதிபதி நாடு திரும்பினார்

மாலைதீவுகளுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்து ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க...

BYD ATTO 3 கார் இறக்குமதியில் பாரிய வரி மோசடி!

அம்பாந்தோட்டை துறைமுகத்திலிருந்து விடுவிக்கப்படாமல் இலங்கை சுங்கத்துறையினரால் சுமார் 1100 BYD ATTO...

கொஸ்கொடயில் இளைஞர் சுட்டுக் கொலை

கொஸ்கொட, துவாமோதர பகுதியில் இன்று (ஜூலை 31) அதிகாலை நடந்த துப்பாக்கிச்...

சீட் பெல்ட் அணியாவிட்டால் சிக்கல்

வாகனங்களில் ‘சீட் பெல்ட்’ சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப் போவதாக...