இலங்கை கிரிக்கட் இற்கான புதிய யாப்பு

Date:

உத்தேச இலங்கை கிரிக்கட் இற்கான யாப்பை முறைசார்ந்த வகையில் நிறைவேற்றிக் கொள்வதற்கான சட்டமூலத்தைத் தயாரிக்குமாறு
சட்ட வரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இலங்கை கிரிக்கட் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் தொடர்பாக விடயங்களை ஆராய்ந்துஅமைச்சரவைக்கு விதந்துரைகளைச் சமர்ப்பிப்பதற்காக வெளிநாட்டலுவல்கள் அமைச்சரின்
தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள அமைச்சரவை உபகுழுவின் அறிக்கையின் விதந்துரைகளுக்கமைய இலங்கை கிரிக்கட் இற்கான புதிய யாப்பைத் தயாரிப்பதற்காக ஓய்வுநிலை உயர்நீதிமன்ற நீதிபதி கே.ரீ.சித்ரசிறி தலைமையில் குழுவொன்றை நியமிப்பதற்கு 2024.02.19 அன்று இடம்பெற்ற
அமைச்சரவையில் அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தது.

அதற்கமைய, குறித்த குழுவால் இலங்கை கிரிக்கட் இற்கான புதிய யாப்பு வரைவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

உத்தேச இலங்கை கிரிக்கட் இற்கான யாப்பை முறைசார்ந்த வகையில் நிறைவேற்றிக் கொள்வதற்கான சட்டமூலத்தைத் தயாரிக்குமாறு
சட்ட வரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக வெளிநாட்டலுவல்கள் அமைச்சர், மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர், தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மற்றும் பொதுமக்கள்
பாதுகாப்பு அமைச்சரும் இணைந்து சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

அடுத்த மூன்று ஆண்டுகளில் 13,600 புதிய தாதியர்கள் நியமனம்

இலங்கையின் தாதியர் சேவைக்காக அடுத்த மூன்று ஆண்டுகளில் 13,600 புதிய தாதியர்...

இலங்கையின் ஆடை மற்றும் நெசவுத் துறை ஏற்றுமதி வருவாய் 7.3% வீழ்ச்சி

மத்திய வங்கியின் பொருளாதார ஆய்வு திணைக்களம் ஏப்ரல் மாதத்திற்காக வெளியிட்டுள்ள அறிக்கையின்படி,...

அரசியல்வாதிகள் திருடவில்லை; அரச சேவையாளர்கள் இன்னும் திருடுகின்றனர்

– அமைச்சர் கே.டி. லால்காந்த தற்போது அரசியல்வாதிகள் ஊழல் அல்லது திருட்டில் ஈடுபடவில்லை...

ராஜாங்கனே சத்தாரதன தேரர் மீது தாக்குதல்

பிக்குத் துறவியிலிருந்து நீக்கப்பட்ட ராஜாங்கனே சத்தாரதன என அழைக்கப்படும் தேரர் மீது...