அமெரிக்கா விடுத்துள்ள அவசர எச்சரிக்கை – தேர்தலுக்கு முன்னும் பின்னும் இலங்கையில் அமைதியின்மை ஏற்படலாம்!

Date:

இலங்கையில் எதிர்வரும் 21ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளும் அமெரிக்க பிரஜைகளுக்கு அமெரிக்க இராஜாங்க திணைக்களம் அவசர எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளது.

அமெரிக்க இராஜாங்க திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

எதிர்வரும் செப்டெம்பர் 21ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தலுக்கு இலங்கை தயாராகி வரும் நிலையில், இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளும் அமெரிக்க பிரஜைகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

தேர்தலுக்கு முன்னும் பின்னும் எதிர்ப்புகள் எதிர்பார்க்கப்படுவதால், இலங்கையில் உள்ள அமெரிக்க பிரஜைகள் பாரிய ஒன்றுக் கூடல்களை தவிர்க்க வேண்டும்.

அத்துடன், அமைதியான பேரணிகள் கூட வன்முறையாக மாறக்கூடிய நிலைமைகள் உருவாகலாம்.” என்றும் அமெரிக்க இராஜாங்க திணைக்களம் அறிவித்துள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சபாநாயகர் மீதான முறைப்பாட்டை விசாரிக்க லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு தீர்மானம்

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக அளிக்கப்பட்டுள்ள புகாரை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள லஞ்சம்...

ஐக்கிய மக்கள் சக்திக்கு 06 வயது

ஐக்கிய மக்கள் சக்தி ஸ்தாபிக்கப்பட்டு 6 வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு நாட்டு...

விபத்தில் மூவர் பலி

தல்துவ - அமிதிரிகல பகுதியில் கார் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும்...

குறி தவறிய துப்பாக்கிச் சூடு

களுத்துறை மாநகர சபைக்கு ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் சார்பில் போட்டியிடும்...