கொஹுவல, சாரங்கரா வீதி பகுதியில் நேற்று (18) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த பகுதியிலுள்ள கடையொன்றில் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதுடன், காயமடைந்த கடையின் உரிமையாளர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
நாடிமாலை, தெஹிவளை பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதுடன், கொஹுவல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.