பெரும்பான்மையான வாக்குகள் ஜனாதிபதிக்கு அல்ல, எதிர்க்கட்சிக்கான வாக்குகள் என்பதால் பெரும்பான்மையினரின் தீர்மானம் அமையும் நாடாளுமன்றம் தேவை என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
சுதந்திரமாக செயற்படும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இருக்க வேண்டும் என்றாலும், ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்திற்கு உட்படாத சுயாதீன சபையாக பாராளுமன்றத்தை பேணுவது முக்கியம் என முன்னாள் உறுப்பினர் குறிப்பிடுகின்றார்.