சந்தையில் முட்டை விலை ஏன் மீண்டும் அதிகரித்தது?

Date:

சந்தையில் முட்டை விலை மீண்டும் அசாதாரணமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.முட்டை விலை குறைவால் முட்டையின் தேவை அதிகரித்துள்ளதாலும், வியாபாரிகள் பண்ணைகளுக்குச் சென்று அதிக அளவில் முட்டைகளை சேகரித்து வருவதாலும் முட்டை விலை மீண்டும் உயர்ந்துள்ளதாக கோழிப் பண்ணை உரிமையாளர்கள் கூறுகின்றனர்.

நாட்டில் தினசரி முட்டை நுகர்வு 80 லட்சமாக உள்ளது, கடந்த வாரம் முட்டை விலை குறைந்துள்ள நிலையில், முட்டையின் நுகர்வும் 95 லட்சமாக அதிகரித்துள்ளது.

இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் எச். குணசேகரனிடம் நடத்திய விசாரணையில், பண்ணையில் இருந்து மொத்த விலையில் 22 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்ட முட்டைகள் அதிக விலைக்கு விற்கப்படுவதாக தெரிவித்தார்.

அதிகளவில் முட்டை கொள்முதல் செய்யப்படுவதால் தற்போது பண்ணைகளில் முட்டை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.எனினும், இன்னும் இரண்டு வாரங்களில் முட்டை விலை வழமைக்குத் திரும்பும் என்றும் குறிப்பிடடுள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கொலை வழக்குகளில் சிக்கும் பிள்ளையான்!

கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளில் T-56 ரக துப்பாக்கிகளால் சுட்டு ஐந்து...

2026 முதல் காலாண்டில் இலங்கையின் பொருளாதாரம் 5.1% வளர்ச்சி

2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி...

அடுத்த மூன்று ஆண்டுகளில் 13,600 புதிய தாதியர்கள் நியமனம்

இலங்கையின் தாதியர் சேவைக்காக அடுத்த மூன்று ஆண்டுகளில் 13,600 புதிய தாதியர்...

இலங்கையின் ஆடை மற்றும் நெசவுத் துறை ஏற்றுமதி வருவாய் 7.3% வீழ்ச்சி

மத்திய வங்கியின் பொருளாதார ஆய்வு திணைக்களம் ஏப்ரல் மாதத்திற்காக வெளியிட்டுள்ள அறிக்கையின்படி,...