”ஈஸ்டர் தாக்குதல்”இரு அறிக்கைகளையும்திங்கள் வெளியிடுவேன்

0
227

“உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவம் தொடர்பான இரண்டு விசாரணை அறிக்கைகளையும் எதிர்வரும் திங்கட்கிழமை வெளியிடுவேன்.” – என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் இரண்டு ஜனாதிபதி ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் இன்னும் பகிரங்கப்படுத்தப்படவில்லை. அவற்றைப் பகிரங்கப்படுத்துவதற்கு அரசுக்கு 7 நாட்கள் அவகாசம் வழங்கியுள்ளேன்.

இந்தக் காலப்பகுதிக்குள் அறிவிக்கை வெளியிடப்படும் என்ற உத்தரவாதத்தை அரசு வழங்கினால் என்னிடம் உள்ள அறிக்கைகளை அரசிடம் கையளிப்பேன். அவ்வாறு இல்லாவிட்டால் நான் கூறியதுபோன்று எதிர்வரும் திங்கட்கிழமை அறிக்கைகளை வெளியிடுவேன்.” – என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here