மாகாண சபைத் தேர்தலை அடுத்த வருடம் நடத்தத் திட்டம் -ஜனாதிபதி தெரிவிப்பு

Date:

மாகாண சபைத் தேர்தலை அடுத்த வருடம் நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இரத்தினபுரி – கஹவத்த பகுதியில் நேற்று நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றிய போது ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது உள்ளுராட்சி மன்ற தேர்தலையும் நடத்துவதற்கு தாம் எதிர்பார்த்துள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி, உள்ளுராட்சி மன்றத்திலிருந்து அமைச்சரவை வரை முழு அரச கட்டமைப்பும் பலப்படுத்தப்பட வேண்டும் எனவும் அதனுடாகவே, நாட்டை கட்டியெழுப்ப முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் மக்கள் தன் மீது வைத்துள்ள நம்பிக்கை மேலும் அதிகரிக்கும் வகையில் எதிர்கால செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி உறுதி அளித்துள்ளார்.

அத்துடன் அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்குப் பலமான நாடாளுமன்ற அதிகாரமும் அவசியமாகும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி கடந்த காலங்களில் பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் மக்கள் மிகுந்த ஆத்திரத்துடன் உள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.

குறித்த உறுப்பினர்களின் முறையற்ற செயற்பாடுகளே மக்கள் மத்தியில் அவ்வாறான கோபம் ஏற்படக்காரணமாக இருந்ததாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

எனவே ஊழலற்றவர்களைக் கொண்டு பலமிக்கதொரு நாடாளுமன்றத்தை உருவாக்குவதற்கு மக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

வத்திக்கான் வெளியுறவு அமைச்சர் இலங்கை வருகிறார்

வத்திக்கான்  வெளியுறவு அமைச்சர் பேராயர் பால் ரிச்சர்ட் கல்லாகர்  எதிர்வரும் நவம்பர்...

பத்மேவுடன் தொடர்பு – ஐந்து நடிகைகளுக்கு சிக்கல்

தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள பிரதான சந்தேகநபரான கெஹெல்பததர பத்மே உடன் வெளிநாடுகளுக்குச்...

இலங்கை பெண்கள் நால்வர் சடலங்களாக மீட்பு

சென்னை எண்ணூர் பெரிய குப்பம் கடற்கரையில் நான்கு பெண்களின் சடலங்கள் கரை...

எரிபொருள் விலை மாற்றம்

மாதாந்த எரிபொருள் விலைச் சூத்திரத்திற்கு அமைய, நேற்று (31) நள்ளிரவு 12.00...