ஆனையிறவு சோதனைச் சாவடி அகற்றப்பட்டது!

0
244

கிளிநொச்சி – ஆனையிறவில் கடந்த 17 வருடங்களாக அமைக்கப்பட்டிருந்த சோதனைச் சாவடி நேற்று செவ்வாய்க்கிழமை அகற்றப்பட்டது.

யாழ்ப்பாணத்துக்கான ஒரேயொரு தரைவழியான ஆனையிறவு வரலாற்றுக் காலம் தொட்டு முக்கியத்துவம் பெற்ற இடமாகும்.

இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் 1952ஆம் ஆண்டு தொடக்கம் இந்தப் பகுதியில் இராணுவ முகாம் அமைக்கப்பட்டு சோதனைச் சாவடியும் இயங்கி வந்தது.

வரலாற்றுக் காலம் தொட்டு போர் மற்றும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த ஆனையிறவை 2000ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு கைப்பற்றியது. இதைத் தொடர்ந்து அங்கிருந்த இராணுவ முகாமும் சோதனைச் சாவடியும் அகற்றப்பட்டன.

இறுதிப் போர் நடவடிக்கையின்போது ஆனையிறவை 2008ஆம் ஆண்டு இராணுவம் மீளக் கைப்பற்றியது. இதன் பின்னர் கடந்த 17 வருடங்களாக இயங்கி வந்த சோதனைச் சாவடியே தற்போது அகற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here