இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்வதை முதன்மை நோக்கமாகக் கொண்ட தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவரகத்தின் (ICTA) பணிப்பாளர் சபை இன்று பிற்பகல் முதல் தடவையாக கூடவுள்ளது.
டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான பிரதம ஜனாதிபதி ஆலோசகராக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவினால் நியமிக்கப்பட்ட கலாநிதி ஹன்ஸ் விஜயசூரிய, அதன் நிறைவேற்று அதிகாரமற்ற தலைவராக பணியாற்றுகிறார்.
பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துதல், தேசிய போட்டித்தன்மை மற்றும் அனைத்து குடிமக்களுக்கும் குறிப்பிடத்தக்க நன்மைகளை வழங்கும் எதிர்பார்ப்புடன், பிராந்தியத்தில் மிகவும் அபிவிருத்தியடைந்த நாடுகளுக்கு இணையாக இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.
சஞ்சய் கருணாசேன, ஹர்ஷ புரசிங்க, சந்திமா குரே, பந்துல ரணதுங்க, ஜெஃப்ரி சல்பர், சமிச அபேசிங்க, ஷனக ரெபெல் ஆகியோர் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகமையின் (ICTA) பணிப்பாளர் சபையின் ஏனைய உறுப்பினர்களாவர்.