அரிசி விற்பனைக்கு சதோசவும் கட்டுப்பாடுகளை விதித்தது

Date:

நாட்டில் நிலவும் அரிசி தட்டுப்பாடு காரணமாக இலங்கை சதொச நிறுவனமும் அரிசியை வெளியிடுவதற்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

அதன்படி, சதொச ஒரு வாடிக்கையாளருக்கு பத்து கிலோ நாட்டு அரிசி மற்றும் கெக்குலு அரிசியை மட்டுமே வழங்குகின்றது.

இதற்கிடையில், பிரபல சுப்பர் மார்கட் ஒன்றில், ஒரு வகை அரிசியானது ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் மூன்று கிலோ மட்டுமே வழங்கப்படுவதாக வாடிக்கையாளர்கள் தெரிவித்திருந்தார்.

அரசாங்கத்தினால் அண்மையில் அரிசி வகைகளுக்கு கட்டுப்பாட்டு விலை அறிவிக்கப்பட்டது.

இதன்படி சம்பா மற்றும் நாட்டு அரிசி கிலோ விலை 90 ரூபாவாகவும், கெக்குலு அரிசி கிலோ விலை 85 ரூபாவாகவும், கீரி சம்பா கிலோ விலை 125 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டது.

இருந்த போதிலும், இந்த விலைக்கு அரிசி ஆலை உரிமையாளர்கள் அரிசியை விற்பனை செய்ய முன்வராத படியினால் சந்தையில் அரிசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், தற்போதைய அரிசி தட்டுப்பாட்டைப் போக்குவதற்காக அரிசியை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கம்பஹாவில் நாளை 12 மணிநேர நீர் தடை

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் நாளை (07) 12 மணி நேர...

அதிகாலை துப்பாக்கிச் சூட்டில் மூவர் காயம்

கொஸ்கம, சுதுவெல்ல பகுதியில் இன்று (ஜூன் 06) அதிகாலை நடந்த துப்பாக்கிச்...

இதுவரை 37 மனித எலும்புக்கூடுகள் மீட்பு

செம்மணி - சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இருந்து இதுவரை 37 மனித...

எஸ்.எம். சந்திரசேன விளக்கமறியலில்

முன்னாள் அமைச்சர் சந்திரசேனவுக்கு விளக்கமறியல் 2015 ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் ரூ....