ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க எதிர்வரும் டிசம்பர் 15ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி இந்தியா செல்கிறார்.
ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் அனுரகுமார திஸாநாயக்க மேற்கொள்ளும் முதலாவது வெளிநாட்டு விஜயம் இதுவாகும்.
இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி இந்திய ஜனாதிபதி, இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அந்நாட்டு அதிகாரிகளை சந்தித்து இருதரப்பு கலந்துரையாடல்களை மேற்கொள்வார் என வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.