திரிசாரணர் பிரிவில் சாரணர் பேடன் பவல் விருதைப் பெற்ற வவுனியா மாவட்ட மைந்தன்

Date:

திரிசாரணர் பிரிவில் சாரணர் பேடன் பவல் விருதைப் பெற்றுக் கொண்ட வவுனியாவைச் சேர்ந்த 2 ஆவது நபராகக் கணேசலிங்கம் யதுகணேஷ் வரலாற்றில் இடம்பிடித்துள்ளார். 11 வருடங்களின் பின் இந்தச் சாதனையை அவர் செய்துள்ளார்.

இலங்கை சாரணர் சங்கத்தின் தலைமைக் காரியாலயத்தால் வழங்கப்படும் திரிசாரணர் பிரிவின் உயர் விருதான பேடன்பவல் விருதை வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய பழைய மாணவனும், பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொறியியல்பீடப் பட்டதாரியும், தற்போது யாழ்ப்பாணம்  பல்கலைக்கழகத்தில் தற்காலிகப் பயிற்றுவிப்பாளராகப் பணியாற்றுகின்றவருமான கணேசலிங்கம்  யதுகணேஷ் பெற்றுக்கொண்டுள்ளார்.

இவர் வவுனியா மாவட்ட சாரணர் கிளையின் சமாதானத்தின் தூதுவரின் மாவட்ட இணைப்பாளர் ஆவார். அத்துடன், ஜப்பானில் நடைபெற்ற சர்வதேச ஜம்போரியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய பெருமையும் அவருக்கு உண்டு.

வவுனியாவுக்கு முதலாவது பேடன்பவல் விருதானது 2013 ஆம் ஆண்டு சுந்தரலிங்கம் காண்டீபனுக்குக் கிடைத்தது. 11 வருடங்களுக்குப் பின்பு, இரண்டாவது பேடன்பவல் விருது 2024.12.16 அன்று கணேசலிங்கம் யதுகணேஷுக்குக் கிடைத்துள்ளது

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

எலான் மஸ்க்கிற்கு நன்றி தெரிவித்த ரணில்

இலங்கையில் தற்போது ஸ்டார்லிங் இணைய சேவை செயற்பாட்டை ஆரம்பித்துள்ளதாக எலான் மஸ்க்...

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நாளை

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நாளை(03) ஆரம்பிக்கப்படவுள்ளது. நாட்டரிசி நெல் 1கிலோகிராம்  120 ரூபாவிற்கும்...

IMF தரும் மகிழ்ச்சி செய்தி

இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) குறித்த நான்காவது மதிப்பாய்வை சர்வதேச...

நோர்வூட் பிரதேச சபையில் இ.தொ.கா. விரைவில் ஆட்சியமைக்கும்!

‘‘நுவரெலியா மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இ.தொ.காவும், தேசிய மக்கள் சக்தியும்...