கடந்த 10 நாட்களில் கிட்டத்தட்ட ஒரு கோடி கிலோ நெல் ஆலைகளில் இருந்து அரிசியாக மாற்றப்பட்டு சந்தைக்கு விடப்பட்டுள்ளதாக வர்த்தக, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.
ஜனவரி 15 ஆம் திகதிக்கு முன்னர் இறக்குமதி செய்யப்படும் அரிசி இலங்கைக்கு கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அரசாங்கத் தரவுகளின்படி சுமார் 70,000 மெற்றிக் தொன் அரிசிக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும், ஆனால் அரிசி இறக்குமதியின் மூலம் படிப்படியாக தட்டுப்பாடு குறைந்து வருவதாகவும் அமைச்சர் குறிப்பிடுகிறார்.
இதேவேளை, கடந்த 4ஆம் திகதி முதல் 21ஆம் திகதி நள்ளிரவு வரையான காலப்பகுதியில் 67,000 மெற்றிக் தொன் அரிசி நாட்டுக்கு கிடைத்துள்ளது. சுங்கத்தின் பிரகாரம், அந்த அரிசிக்கான இறக்குமதி வரியாக நான்கு பில்லியன் முப்பத்து பத்து ரூபா பணம் அறவிடப்பட்டுள்ளது.