கொழும்பில் இன்று விசேட போக்குவரத்துத் திட்டம் – வாகன சாரதிகளுக்கு பொலிஸார் முக்கிய அறிவிப்பு

0
242

புத்தாண்டு தினத்தை முன்னிட்டு கொழும்பு மற்றும் காலி முகத்திடலை நோக்கிச் செல்லும் வாகனங்களை நிர்வகிப்பதற்கான விசேட போக்குவரத்துத் திட்டத்தை பொலிஸார் இன்று நடைமுறைப்படுத்தவுள்ளனர்.

2025 ஆம் ஆண்டை வரவேற்க மக்கள் காலி முகத்திடலில் கூடுவதால், கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாரிய போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை நிவர்த்தி செய்யும் வகையில், புறக்கோட்டை, கொழும்பு கோட்டை, கொம்பனி தெரு, மருதானை, கொள்ளுப்பிட்டி, பம்பலப்பிட்டி மற்றும் கறுவாத்தோட்டம் உள்ளிட்ட முக்கிய பிரதேசங்களை உள்ளடக்கிய விசேட போக்குவரத்துத் திட்டத்தை பொலிஸார் வகுத்துள்ளனர்.

காலி முகத்திடல் வீதியில் வாகனத் தரிப்பிடங்களில் வாகனங்களை நிறுத்துவது தடைசெய்யப்படும். அனைத்து வாகனங்களும் மேற்குறிப்பிட்ட பொலிஸ் பிரிவுகளுக்குள் இருக்கும் இலவச அல்லது தனியார் தரிப்பிடங்களில் வாகனங்களை நிறுத்திவைத்துவிட்டே காலி முகத்திடலுக்குச் செல்ல வேண்டும் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here