ஜனாதிபதியின் ‘கிளீன் ஸ்ரீலங்கா’ திட்டத்திற்கு சங்கா, மஹேல ஆதரவு

Date:


‘கிளீன் ஸ்ரீலங்கா’ என்பதை எளிமையாக விளக்கினாலும் அது மிகவும் ஆழமான யோசனையுடன் கூடிய செயலாகும் என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் எண்ணக்கருவுக்கு அமைய நடைமுறைப்படுத்தப்படும் இந்த தேசிய வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்ட போதே சங்கக்கார மேற்கண்டவாறு தெரிவித்தார்.

‘கிளீன் ஸ்ரீலங்கா’ தேசிய செயற்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று (1) காலை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் இலங்கை அணியின் இரண்டு முன்னாள் தலைவர்களான குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்தன ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த சங்கக்கார, இந்த வேலைத்திட்டம் மிகவும் காலத்திற்கேற்ற முக்கியமான செயலாகும்.

இந்த மனநிலையை மாற்றி, அன்றாட வாழ்க்கையிலும் நிர்வாகத்திலும் நல்ல மதிப்புகள் மற்றும் கொள்கைகளைச் சேர்ப்பது நாட்டின் வளர்ச்சிக்கும், மக்களின் வளர்ச்சிக்கும் பெரும் உதவியாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.

“மிக முக்கியமான ஒரு செயலை இன்று தொடங்குமாறு ஜனாதிபதி கேட்டுக் கொண்டார். புத்தாண்டின் முதல் நாளில் இது போன்ற ஒரு செயல்முறையை தொடங்குவது மிகவும் நல்ல விடயம். எளிமையாக விளக்கப்பட்டாலும், இந்த செயல்முறை மிகவும் ஆழமான யோசனையுடன் தொடங்கப்பட்டுள்ளது” என்றார்.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய மஹேல ஜயவர்தன ‘கிளீன் ஸ்ரீலங்கா’ என்பது மிகவும் முக்கியமான பணியாகும் என தெரிவித்தார்.

ஜனாதிபதியிடமிருந்து கிடைக்கும் ஒத்துழைப்புடன் இந்தத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் பாரிய பொறுப்பு மக்களுக்கும் உள்ளது என்றார்.

“புதிய ஆண்டில் மிக முக்கியமான பணி ஒன்று இருப்பதாக நான் நினைக்கிறேன். ஜனாதிபதி மற்றும் அனைவரின் ஆதரவுடன், ‘கிளீன் ஸ்ரீலங்கா’ திட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் பாரிய பொறுப்பு குடிமக்களாகிய எமக்கு உள்ளது. நல்ல ஆரம்பம். நிறைய இருக்கிறது. செய்ய வேண்டும்.” என்றார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இதுவரை 37 மனித எலும்புக்கூடுகள் மீட்பு

செம்மணி - சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இருந்து இதுவரை 37 மனித...

எஸ்.எம். சந்திரசேன விளக்கமறியலில்

முன்னாள் அமைச்சர் சந்திரசேனவுக்கு விளக்கமறியல் 2015 ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் ரூ....

மருந்து உற்பத்தி துறையில் புரட்சிகர மாற்றம்!

100 சதவீதம் இலங்கைக்குச் சொந்தமான மருந்து உற்பத்தி நிறுவனமான சினெர்ஜி பார்மாசூட்டிகல்ஸ்,...

மருத்துவமனைகளும் உணவகங்களும் தொற்றா நோய்கள் பரவும் மையங்களாக மாறிவிட்டன!

உணவுக் கட்டுப்பாட்டு வர்த்தமானிகளில் தாமதம் ஏற்படுவதால் பொது சுகாதாரம் ஆபத்தில் உள்ளது....