ஐக்கிய இராச்சியத்தின் இந்தோ-பசிபிக் பிராந்திய அமைச்சருடன் சஜித் சந்திப்பு

0
191

ஐக்கிய இராச்சியத்தின் இந்தோ-பசிபிக் பிராந்திய அமைச்சர் கேத்தரின் வெஸ்ட் உள்ளிட்ட ஐக்கிய இராச்சியத்தின் தூதுக்குழுவினரை எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்ட குழு சந்தித்து கலந்துரையாடியது.

இந்த சந்திப்பின் போது, நாட்டின் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான உதவியை வழங்குமாறும், சுற்றுலாத் துறை தொடர்பாக ஐக்கிய இராச்சிய மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் தூதுக்குழுவினரிடம் சஜித் கோரிக்கை விடுத்தார்.

இந்த சந்திப்பில் ஐக்கிய இராச்சியத்தின் இந்தோ-பசிபிக் பிராந்திய அமைச்சர் கேத்தரின் வெஸ்டின் பிரத்தியேகச் செயலாளர் ரொப் கோர், இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஆன்ட்ரூ பேட்ரிக் மற்றும் பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தின் இரண்டாம் செயலாளர் அலெக்சாண்டர் ஸ்மித் ஆகியோருடன், ஐக்கிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா, முஜிபுர் ரஹுமான் மற்றும் காவிந்த ஜயவர்தன ஆகியோரும் ஏரான் விக்ரமரத்னவும் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here