அறகலயவின்போது தமது சொத்துகளுக்கு ஏற்பட்டுள்ள இழப்பீடு எனக்கூறி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 43 பேர், மொத்தமாக 122 கோடியே 41 லட்சத்து 34 ஆயிரம் ரூபாவை இழப்பீடாக பெற்றுள்ளனர்.
இதில் குறிப்பாக கெஹலிய ரம்புக்வெல்ல 959 லட்சம் ரூபாவையும், ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ 934 லட்சம் ரூபாவையும் இழப்பீடாக பெற்றுள்ளனர்.
43 பேரடங்கிய பெயர் பட்டியலை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ சபையில் இன்று சமர்ப்பித்தார்.
விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டாலோ, அனர்த்தத்தால் வீடுகள் பாதிக்கப்பட்டாலோ இழப்பீட்டை பெறுவதற்கு மக்கள் எவ்வளவு கஷ்டப்பட வேண்டும், ஆனால் அதிகாரத்தைப் பயன்படுத்தி, அரசாங்க அதிகாரிகளை மிரட்டியே அரசியல் வாதிகள் பெருமளவு இழப்பீட்டை பெற்றுள்ளனர் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இப்படியான அரசியல் கலாசாரமே எமது நாட்டில் இருந்தது, இதனையே மாற்றிவருகின்றோம், இப்படியான நபர்களே ஒன்றிணைவது பற்றி பேச்சு நடத்திவருகின்றனர் எனவும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டார்.