13 இந்திய மீனவர்கள் விடுதலை

Date:

கொழும்பு : எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கைதான 13 மீனவர்களுக்கு தலா ரூ.50,000 அபராதம் விதித்தது இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.

ராமேஸ்வரத்தில் இருந்து கடந்த டிசம்பர் 24-ம் திகதி மீன்பிடிக்க சென்ற 17 பேரை எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்து சிறையில் அடைத்தது. இந்த நிலையில் சிறை பிடிக்கப்பட்ட 17 பேரும் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இவர்களில் 13 பேர் ரூ.50,000 அபராதம் செலுத்தினால் விடுதலை செய்யப்படுவார்கள் என்று மன்னார் நீதிமன்றம் அறிவித்துள்ளது. ரூ.50,000 கட்டினால் மட்டுமே விடுதலை என்ற உத்தரவு ராமேஸ்வரம் மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே ராமேஸ்வரம் மீனவர்கள் 17 பேரில் 2 பேருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது இலங்கை நீதிமன்றம். 2 மீனவர்களும் படகோட்டி என்பதால் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து மன்னார் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

2 மீனவர்களின் கைரேகை பதிவு தவறாக இருந்ததால் அவர்களின் வழக்கு மட்டும் பிப்.12ம் திகதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக நீதிபதி குறிப்பிட்டார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பணவீக்கம் 5.5% ஆக உயர்வு

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் (CCPI) அடிப்படையில் கணக்கிடப்படும் வருடாந்த பணவீக்கம்...

பசில் ராஜபக்சவை கைது செய்ய உத்தரவு

2014 ஆம் ஆண்டு ஊவா மாகாண சபை தேர்தல் பிரசாரத்தின் போது...

முக்கிய அமைச்சின் செயலாளர் இராஜினாமா!

போக்குவரத்து, நெடுஞ்சாலை மற்றும் நகர்ப்புற அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில...

அன்று நடந்த சம்பவம் ஒன்று!

இது 2022 ஏப்ரல் மாதத்தின் கடைசி வாரத்தில் நடந்த சம்பவம் என...